×

சீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்

‘மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்து மாடல் அழகி எமி ஜாக்சன். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ உள்ளிட்ட பெரிய ஜாம்பவான்களின் படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ‘2.ஓ’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரியில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் எமிஜாக்சன், தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையிலும் இருக்கிறார்
 
சீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்

சீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்

‘மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்து மாடல் அழகி எமி ஜாக்சன். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ உள்ளிட்ட பெரிய ஜாம்பவான்களின் படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ‘2.ஓ’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரியில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் எமிஜாக்சன், தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையிலும் இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். முன்னணி நடிகைகள் வரிசையில் இருக்கும்போதே தற்போது டிவி சீரியலுக்குள் நுழைந்துள்ளார் எமிஜாக்சன். அதுவும், அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் இவர் நடிக்கவிருக்கிறார்.

அமெரிக்காவில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி தொடர் மிகவும் பிரபலம். இந்த டிவி தொடர் இரண்டு சீசன் முடிவடைந்து தற்போது மூன்றாவது சீசன் நடக்கவிருக்கிறது. இதில் அவர் சாட்டர்ன் கேர்ள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குவாண்டிகா என்ற ஆங்கிலத் தொடர் மூலம் கவனம் பெற்று `பே வாட்ச்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த வரிசையில் தற்போது எமி ஜாக்சனும் இணைந்திருக்கிறார். எனவே, அடுத்து ஹாலிவுட் வாய்ப்புக்காகத்தான் எமிஜாக்சனும் டிவி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News