×

நெல்லை சென்ற இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு ரசிகர்கள் ராஜமரியாதை!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைக் காண படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலியில் உள்ள பூர்ணகலா திரையரங்குக்குச் சென்றார். அப்போது, ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார். இப்படத்துக்கு மக்கள்
 
நெல்லை சென்ற இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு ரசிகர்கள் ராஜமரியாதை!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.

கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தைக் காண படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலியில் உள்ள பூர்ணகலா திரையரங்குக்குச் சென்றார்.

நெல்லை சென்ற இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு ரசிகர்கள் ராஜமரியாதை!

அப்போது, ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார்.

இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கமலஹாசன் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News