×

பிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கும் பிரபல நடிகை – பாத்திமா பாபு கூறிய ரகசியம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று திறமையாக விளையாடி வரும் தர்ஷன் பலரையும் கவர்ந்துள்ளார். மலேசிய தமிழரான தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது நடவடிக்கை மூலம் யாரையும் புண்படுத்தாமல் விளையாடி வருகிறார். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார். வனிதா விஜயகுமார், சரவணன் என அனைவரும் கோபப்பட்ட போது நீங்கள் செய்தது தவறு என வாதாடினார். இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி
 
பிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கும் பிரபல நடிகை – பாத்திமா பாபு கூறிய ரகசியம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று திறமையாக விளையாடி வரும் தர்ஷன் பலரையும் கவர்ந்துள்ளார்.

மலேசிய தமிழரான தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது நடவடிக்கை மூலம் யாரையும் புண்படுத்தாமல் விளையாடி வருகிறார். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார். வனிதா விஜயகுமார், சரவணன் என அனைவரும் கோபப்பட்ட போது நீங்கள் செய்தது தவறு என வாதாடினார். இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய பாத்திமா பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளையாக இருக்கிறார். என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கூட தர்ஷனை பிடித்திருக்கிறது. அவரை யாரும் விட்டுக்கொடுப்பதில்லை. அவர் வெளியே வந்ததும் அவரை தத்தெடுக்க ஒரு பிரபல நடிகை காத்திருக்கிறார்’ என தெரிவித்தார். ஆனால், அது யார் என அவர் தெரிவிக்கவில்லை. தர்ஷன் வெளியே வந்ததும் அது உங்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News