×

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் இடையாயான காதலுக்கு இயக்குனர் சேரன் குறுக்கே நின்றார் என தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இது இன்னும் ஓயவில்லை. இயக்குனர் சேரனின் டிவிட்டர் பக்கத்தில் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த சேரன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சனை தீராது.. இதை வளர்த்து
 
கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் இடையாயான காதலுக்கு இயக்குனர் சேரன் குறுக்கே நின்றார் என தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இது இன்னும் ஓயவில்லை. இயக்குனர் சேரனின் டிவிட்டர் பக்கத்தில் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த சேரன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சனை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை.. நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன் என பொறுமையாக சேரன் கூறினார். ஆனாலும் சிலர் அடங்காமல் அவரை குறை கூறுக்கொண்டே இருந்தனர்.

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

எனவே ‘கவின்-லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சனைக்கு வரவேண்டாம்’ என பதிவிட்டார்.

மேலும், நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.

என அவர் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News