×

‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவுடன் நடனமாடிய காயத்ரி – வைரலாகும் வீடியோ!

Super deluxe : ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின், மிருணாளினி ரவி ஆகியோர் நடித்திருந்தனர். தியாகராஜன் குமாரராஜாவே தனது ‘Tyler Durden And Kino Fist’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்த இதற்கு யுவன் ஷங்கர் ராஜா
 
‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவுடன் நடனமாடிய காயத்ரி – வைரலாகும் வீடியோ!

Super deluxe : ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின், மிருணாளினி ரவி ஆகியோர் நடித்திருந்தனர். தியாகராஜன் குமாரராஜாவே தனது ‘Tyler Durden And Kino Fist’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்த இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ‘சூப்பர் டீலக்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷில்பாவுடன் (விஜய் சேதுபதி), காயத்ரி நடனமாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News