×

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

விஜய் ரசிகர் ஒருவரை கைதி தயாரிப்பாளர் கிண்டலடித்து போட்ட டிவிட் டிவிட்டரில் அவருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படமும், கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் மோதல் தொடர்ந்து வருகிறது. இதில், விஜய் ரசிகர்கள் பலர் கைதி பட தயாரிப்பாளர் பிரபுவுடன் மோதி வருகின்றனர். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ஒருவர் ‘
 
தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

விஜய் ரசிகர் ஒருவரை கைதி தயாரிப்பாளர் கிண்டலடித்து போட்ட டிவிட் டிவிட்டரில் அவருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த பிகில் திரைப்படமும், கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் மோதல் தொடர்ந்து வருகிறது. இதில், விஜய் ரசிகர்கள் பலர் கைதி பட தயாரிப்பாளர் பிரபுவுடன் மோதி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ஒருவர் ‘ பிகில் திரைப்படத்தை முன் பதிவு செய்ய முயன்றபோது தெரியாமல் கைதி படம் புக் ஆகிவிட்டது’ என கிண்டலடித்து அதை கைதி பட தயாரிப்பாளர் பிரபுவிற்கு டேக் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரபு ‘தம்பி. உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு.. அறிவு இல்ல போ’ என கலாய்த்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். நடுவில் கார்த்தி, சூர்யா, அஜித் ரசிகர்கள் களமிறங்கி விஜய் ரசிகர்களை திட்டி வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News