×

மாநாடுக்கு போட்டியாக மகா மாநாடு – சிம்பு அலப்பறை தாங்கலையே

Actor STR Maagha Maanaadu – மாநாடு திரைப்படத்தில் இருந்து தன்னை தூக்கிவிட்டதால், ஆத்திரமடைந்த சிம்பு தற்போது மகா மாநாடு என்கிற புதிய படத்தை இயக்கி, நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் ஏராளமான துணை நடிகர்களுடன் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், வார விடுமுறைகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என சிம்பு கூறிவிட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் இழுபறி நீடித்து
 
மாநாடுக்கு போட்டியாக மகா மாநாடு – சிம்பு அலப்பறை தாங்கலையே

Actor STR Maagha Maanaadu – மாநாடு திரைப்படத்தில் இருந்து தன்னை தூக்கிவிட்டதால், ஆத்திரமடைந்த சிம்பு தற்போது மகா மாநாடு என்கிற புதிய படத்தை இயக்கி, நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் ஏராளமான துணை நடிகர்களுடன் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், வார விடுமுறைகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என சிம்பு கூறிவிட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதில் இழுபறி நீடித்து வந்தது.

மாநாடுக்கு போட்டியாக மகா மாநாடு – சிம்பு அலப்பறை தாங்கலையே

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தாயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தில் இருந்து சிம்புவை நீக்கிவிட்டு வேறு நடிகரை நடிக்க வைப்பதாக அறிவித்தார். மாநாடு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் இணைந்து தயாரிக்க ‘மகா மாநாடு’ என்கிற தலைப்பில் சிம்பு ஒரு புதிய படத்தை இயக்கி, நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படம் ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும், இப்படத்தில் அமெரிக்க பாடகர் ஐகான் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News