×

நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ‘ஹாரிபாட்டர்’ இசைக்குழு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் அதிரடியாக நடித்துள்ள திரைப்படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தின் பின்னணி இசையமைப்பிற்காக ஹாலிவுட்டின் ஒரு முன்னணி இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் கைகோர்த்துள்ளார்.
 
நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ‘ஹாரிபாட்டர்’ இசைக்குழு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் அதிரடியாக நடித்துள்ள திரைப்படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தின் பின்னணி இசையமைப்பிற்காக ஹாலிவுட்டின் ஒரு முன்னணி இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் கைகோர்த்துள்ளார். ‘தி பி.கே.எப் பிரேக் பில்ஹார்மோனியா ஆர்கெஸ்ட்ரா’ என்ற இந்த குழு ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’, ‘ஹாரிபாட்டர்’, ‘கேம் ஆம் தோரோன்ஸ்’ போன்ற பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரானின் இந்த புதிய முயற்சியால் இந்த படத்தின் பின்னணி இசை ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

நயன்தாரா, ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், லால்குடி இளையராஜா கலை இயக்கத்தில் , கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில், பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News