×

பார்த்திபன் ஹாட் ட்வீட்! ஏமாற்றிய ரஜினி கமல்

சமூக வலைத்தளத்தில் யோகா தினத்தை அனைத்து பிரபலங்களும் யோகா செய்வது போல உள்ள புகைப்படத்தை, ட்வீட்டும் செய்து வருகின்றனர். இதை அனைவரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பாரத்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளிலும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இணையதளத்திலும் யோகா தின சிறப்பாக பல்வேறு யோகாவை செய்து புகைப்படம்
 
பார்த்திபன் ஹாட் ட்வீட்! ஏமாற்றிய ரஜினி கமல்

சமூக வலைத்தளத்தில் யோகா தினத்தை அனைத்து பிரபலங்களும் யோகா செய்வது போல உள்ள புகைப்படத்தை, ட்வீட்டும் செய்து வருகின்றனர். இதை அனைவரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பாரத்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளிலும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இணையதளத்திலும் யோகா தின சிறப்பாக பல்வேறு யோகாவை செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி யோகா செய்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகியது.

இந்நிலையில் நடிகர் பாரத்திபன் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனக்கு உரிய பாணியில் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் என்னவென்றால், யாகாவாராயினும் யோக செய்க, செய்யாகால் பேஜாராயிடும் ஹெத்து என்று திருக்குறள் மூலம் யோகாவின் முக்கியத்துவம் எடுத்துரைத்துள்ளார்.

அதுபோல வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையும், நடன மாஸ்டருமான காயத்ரி ரகுமாம் யோகா தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நெட்டிசன் அவரை கலாய்த்து வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் யோகா வாழ்த்து தெரிவித்து காயத்ரி போட்டுள்ள ட்வீட்டை பார்த்து மேலும் அவரை விமர்சித்து கலாய்த்து வருகின்றனர்.

அதுபோல ரஜினி மற்றும் கமல் யோகா பற்றிய போஸ்ட் ஏதாவது இருக்கிறதா என்று வலைத்தளத்தில் பார்த்தால் யோகா பற்றிய எந்தவொரு ட்வீட்டும் இல்லை. யோகா என்றாலே நமது நினைவுக்கு வருவது இவர்கள் தான். ஏனெனில் கமல் மற்றும் ரஜினி உடம்பை ஃபீட்டாக இருப்பதை பார்த்தாலே தெரியும்.

From around the web

Trending Videos

Tamilnadu News