×

எனக்கு எல்லாம் நீயே!.. காதலி புகைப்படத்தை வெளியிட்ட முகேன்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை தட்டி சென்றவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் பாடகர் ஆவார். சொந்தமாக பாடல் எழுதி, பாடி சில ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உருக்கமான ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், எனக்கு மிக சிறந்த தோழியாக இருக்கிறாய்.. நான் சாய்ந்து
 
எனக்கு எல்லாம் நீயே!.. காதலி புகைப்படத்தை வெளியிட்ட முகேன்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை தட்டி சென்றவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் பாடகர் ஆவார். சொந்தமாக பாடல் எழுதி, பாடி சில ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உருக்கமான ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், எனக்கு மிக சிறந்த தோழியாக இருக்கிறாய்.. நான் சாய்ந்து கொள்ளும் தோள் உன்னுடையது. எல்லாவற்றையும் விட உன் மகிழ்ச்ச்சி அனைத்திற்கும் நான் காரணமாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். உனக்கு அதிர்ஷம் மற்றும் வாழ்த்துக்கள் கிடைக்கட்டும். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்’ என உருகியுள்ளார்.

ஏற்கனவே காதலி யாஷ்மின் நதியாவிற்காக ஒரு பாடல் எழுதி யுடியூப்பில் முகேன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனக்கு எல்லாம் நீயே!.. காதலி புகைப்படத்தை வெளியிட்ட முகேன்…

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News