×

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

தன்னை யாரும் அழிக்க முடியாது என நித்தியானந்தா புதிய வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்புகள் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. சமீபத்தில் குஜராத்தில் செயல்பட்டு வந்த அவரின் ஆசிரம் இழுத்து மூடப்பட்டது. விசாரணைக்காக போலீசார் அவரை தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம்
 
நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

தன்னை யாரும் அழிக்க முடியாது என நித்தியானந்தா புதிய வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்புகள் ஆகியவற்றில் சிக்கியிருப்பவர் நித்தியானந்தா. சமீபத்தில் குஜராத்தில் செயல்பட்டு வந்த அவரின் ஆசிரம் இழுத்து மூடப்பட்டது. விசாரணைக்காக போலீசார் அவரை தேடிய போது அவர் எங்கிருக்கிறார் என்பதையே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதேநேரம், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வாடர் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாஷ் நாடு’ என நித்தியானந்தா பிரகடனம் செய்துள்ளார். மேலும், அந்நாட்டிற்கான மொழி, கொடி, சின்னம் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

ஆனால், நித்யானந்தாவுக்கு அடைக்கலமோ அல்லது சொந்த நிலம் வாங்க அனுமதியோ கொடுக்கப்படவில்லை என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், புதிய வீடியோவை வெளியிட்டுள்ள நித்தியானந்தா ‘உண்மையை தெரிவிப்பதன் மூலம் நான் என்னுடைய வலிமையை வெளிப்படுத்துவேன். என்னை யாரும் தொடவும் முடியாது. அழிக்கவும் முடியாது. நான் உங்களிடம் உண்மையை சொல்லுகிறேன். நான்தான் பரமசிவன். சீடர்களாகிய நீங்கள் என்னிடம் நேர்மை மற்றும் விசுவாசத்தை காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை’ என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

நித்தியானந்தாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் இப்படி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News