×

எனக்கு அப்படி யாரும் இல்லை. அலறும் வனமகன் நாயகி

ஜெயம் ரவி நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘வனமகன்’ திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக அறிமுகமாகியுள்ள சாயிஷாவுக்கு ஏற்கனவே ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ உள்பட மூன்று படங்கள் ஒப்பந்தமாகியுள்ளது. இன்னும் ஒருசில தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் நான் தான் சாயிஷாவின் மேனேஜர் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் ஒருசிலர் திரிவதாகவும், சாயிஷாவின் கால்ஷீட் வாங்கித்தருகிறேன் என்று பணம் பறிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்விப்பட்ட
 
எனக்கு அப்படி யாரும் இல்லை. அலறும் வனமகன் நாயகி

ஜெயம் ரவி நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘வனமகன்’ திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக அறிமுகமாகியுள்ள சாயிஷாவுக்கு ஏற்கனவே ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ உள்பட மூன்று படங்கள் ஒப்பந்தமாகியுள்ளது. இன்னும் ஒருசில தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நான் தான் சாயிஷாவின் மேனேஜர் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் ஒருசிலர் திரிவதாகவும், சாயிஷாவின் கால்ஷீட் வாங்கித்தருகிறேன் என்று பணம் பறிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த கேள்விப்பட்ட சாயிஷா அதிர்ச்சி அடைந்து உடனே ‘எனக்கு மேனேனர் என்று ஒருவரும் கிடையாது. யாராவது என்னை படத்தில் நடிக்க புக் செய்ய வேண்டுமானால் என்னிடமோ அல்லது என்னுடைய அம்மாவிடமோ நேரில் வாருங்கள்’ என்ரு தனது டுவிட்டரில் சாயிஷா அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News