×

என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார்

கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ படத்தை தயாரிப்பதாக கூறிக்கொண்ட இயக்குனர் கெளதம் மேனன், அந்த படத்திற்காக செலவே செய்யவில்லை என்றும், அந்த படத்திற்காக தான் அதிக முதலீடு செய்துள்ளதாகவும் கூறிய கார்த்திக் நரேன், ‘நரகாசுரன்’ படத்தை காண்பித்து பணம் பெற்ற கெளதம் மேனன் அந்த பணத்தை தன்னுடைய மற்ற படங்களுக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் இந்த நிலையில் கார்த்திக் நரேனின் குற்றச்சாட்டை மறுத்த கெளதம் மேனன், தான்’ நரகாசுரன்’ படத்தில் இருந்து விலகவும் தயார் என்று
 
என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார்

என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார்

கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ படத்தை தயாரிப்பதாக கூறிக்கொண்ட இயக்குனர் கெளதம் மேனன், அந்த படத்திற்காக செலவே செய்யவில்லை என்றும், அந்த படத்திற்காக தான் அதிக முதலீடு செய்துள்ளதாகவும் கூறிய கார்த்திக் நரேன், ‘நரகாசுரன்’ படத்தை காண்பித்து பணம் பெற்ற கெளதம் மேனன் அந்த பணத்தை தன்னுடைய மற்ற படங்களுக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்

இந்த நிலையில் கார்த்திக் நரேனின் குற்றச்சாட்டை மறுத்த கெளதம் மேனன், தான்’ நரகாசுரன்’ படத்தில் இருந்து விலகவும் தயார் என்று அறிவித்தார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் மீண்டும் கெளதம் மேனன் மீது புகார் கூறியுள்ளார்.

“கவுதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான். நரகாசுரன் படத்துக்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கவுதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News