×

நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் – காஜர் அகர்வால் பேட்டி

நடிகரையோ, சினிமா துறையை சேர்ந்த ஒருவரையோ திருமணம் செய்ய மாட்டேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பெரும்பாலன முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர் காஜர் அகர்வால். தமிழில் விஜய், அஜித், சூர்யா ஆகியோரோடு நடித்துவிட்டார். இந்தியன்2-வில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். குறிப்பாக இதுவரை எந்த கிசுகிசுவில் அவர் சிக்கவில்லை. அதேபோல், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், தனது திருமணம் பற்றி கருத்து தெரிவித்துள்ள காஜல் “திரைத்துறையில் இருந்து
 
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் – காஜர் அகர்வால் பேட்டி

நடிகரையோ, சினிமா துறையை சேர்ந்த ஒருவரையோ திருமணம் செய்ய மாட்டேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பெரும்பாலன முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர் காஜர் அகர்வால். தமிழில் விஜய், அஜித், சூர்யா ஆகியோரோடு நடித்துவிட்டார். இந்தியன்2-வில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். குறிப்பாக இதுவரை எந்த கிசுகிசுவில் அவர் சிக்கவில்லை.

அதேபோல், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், தனது திருமணம் பற்றி கருத்து தெரிவித்துள்ள காஜல் “திரைத்துறையில் இருந்து ஒருவரை திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனக்கு பொருத்தமான, பிடித்தமான ஒருவரை நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

அவரின் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்ட நிலையில், காஜலையும் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News