×

அவர் இல்லாமல் இன்று நான் ஹீரோ இல்லை – நன்றி மறவாத அஜித்

Rajiv Menon Inerview – அஜீத்துடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ்மேனன் பகிர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பாளர் தினமான நேற்று அஜித்தின் பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர். திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் தபுவுக்கு ஜோடியாக அஜித் நடித்திருந்தார். வாலி
 
அவர் இல்லாமல் இன்று நான் ஹீரோ இல்லை – நன்றி மறவாத அஜித்

Rajiv Menon Inerview – அஜீத்துடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ்மேனன் பகிர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பாளர் தினமான நேற்று அஜித்தின் பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர். திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர் இல்லாமல் இன்று நான் ஹீரோ இல்லை – நன்றி மறவாத அஜித்

மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் தபுவுக்கு ஜோடியாக அஜித் நடித்திருந்தார்.

வாலி படத்தில் அஜித் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்திருந்த போது ரூ. 2 லட்சம் பணம் இல்லாமல் அப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அந்த பணத்தை நண்பர் என்கிற முறையில் ராஜீவ் மேனன் தான் அஜித்திடம் கொடுத்துள்ளார்.

அவர் இல்லாமல் இன்று நான் ஹீரோ இல்லை – நன்றி மறவாத அஜித்

இந்நிலையில், ராஜீவ் மேனன் அஜித் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அஜித்தை சந்தித்தேன். அப்போது வாங்க தலைவா என வரவேற்றார். மேலும், அருகில் இருந்த நபரிடம் இவர் இல்லையேல் இன்று நான் ஹீரோ இல்லை எனக்கூறினார்.

அப்படி நான் என்ன செய்து விட்டேன் எனக் கேட்டேன். அப்போது, வாலி பட ரிலீஸுக்காக நான் செய்த உதவியை கூறினார். அதை இன்றும் மறக்காமல் என்னை உயர்வுபடுத்தி அஜித் பேசியது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. வாலி படம் வெளியாகி ஒரு வாரத்தில் அந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்து விட்டார் என அந்த பேட்டியில் ராஜிவ் மேனன் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News