×

பெண்கள் தம் தண்ணி அடித்தால் படுக்கைக்கு சம்மதமா? – மாறனை வெளுத்து வாங்கிய காயத்ரி

Gayathri Raguram Vs Blue sattai maaran – அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை மிகவும் கீழ்தரமாக விமர்சித்த யுடியூப் விமர்சகர் ப்ளூசட்ட மாறனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியானது. பெண்களின் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது. ஆனால், தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் ப்ளூ
 
பெண்கள் தம் தண்ணி அடித்தால் படுக்கைக்கு சம்மதமா? – மாறனை வெளுத்து வாங்கிய காயத்ரி

Gayathri Raguram Vs Blue sattai maaran – அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை மிகவும் கீழ்தரமாக விமர்சித்த யுடியூப் விமர்சகர் ப்ளூசட்ட மாறனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியானது. பெண்களின் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.

ஆனால், தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் ப்ளூ சட்டமாறன் இப்படத்தை வழக்கம் போல் மிகவும் கிண்டலடித்து விமர்சித்தார். இப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறியிருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் கொதிப்படைந்து அவரை கண்டபடி திட்டி கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் ‘ புகை மற்றும் மது அருந்தும் பெண்கள் ஒரு ஆணை தொட்டுப் பேசினால் அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என மாறன் நினைக்கிறார். அவர்களில் ஒருவராகத்தான் மாறன் இருக்க வேண்டும். அவரது இளம் வயதில் அவர் இப்படி பெண்களிடம் நடந்திருப்பார் அதனால்தான் அவரின் விமர்சனங்கள் இப்படி இருக்கிறது’ என டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News