×

நான் இப்பெல்லாம் சரக்கடிப்பதில்லை: பிரபல நடிகளை பளிச் பேட்டி!

நான் தற்போது மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன் என பிரபல நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டார். இதனையடுத்து அவர் அமெரிக்கா சென்று புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று, முற்றிலும் குணமாகி வந்தார். இதனையடுத்து மீண்டும் படங்களில் நடித்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் தனது 48-வது
 
நான் இப்பெல்லாம் சரக்கடிப்பதில்லை: பிரபல நடிகளை பளிச் பேட்டி!

நான் தற்போது மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன் என பிரபல நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டார். இதனையடுத்து அவர் அமெரிக்கா சென்று புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று, முற்றிலும் குணமாகி வந்தார்.

இதனையடுத்து மீண்டும் படங்களில் நடித்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த பிறந்த நாளுக்கு மனிஷா கொய்ராலாவின் நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டுள்ள அவர், என் மீது சினிமா பிரபலங்கள் இன்னமும் பிரியமும், மரியாதையும் வைத்திருப்பதை நான் உணர்ந்தேன். கடைசியாக நாம் நல்ல பெயருடன் வாழ்வது அவசியம். கெட்ட பெயரை எளிதில் வாங்கிவிடலாம்.

எனது பிறந்தநாளுக்கு வந்து அனைவரும் என்னை வாழ்த்தும் போது தான் என்னை அனைவரும் மதிப்பதை உணர முடிந்தது. அப்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன் என கூறினார். மேலும் மது அருந்தும் பழக்கம் உடையவரான அவர் தற்போது அதனை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News