×

பிகில் தீபாவளிக்கு வருகிறதா? – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்

பிகில் திரைப்படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது. பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் கூறிய கருத்து அதிமுகவினருக்கு
 
பிகில் தீபாவளிக்கு வருகிறதா? – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்

பிகில் திரைப்படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது.

பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் கூறிய கருத்து அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, தலைவா படத்திற்கு நேர்ந்தது போல் கடைசி நேரத்தில் படத்தை வெளியிட சில சிக்கல்கள் உருவாகலாம் என கருதப்பட்டது. அதோடு, பிகில் திரைப்படம் தணிக்கை குறித்த தகவல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனவே, தீபாவளி பண்டிகையான அக். 27ம் தேதியா அல்லது அதற்கு முன்பே அக்.25ம் தேதி வெள்ளிக்கிழமையே வெளியாகிறது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், அப்படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ பிகில் படத்திற்கு சென்சார் பணிகள் முடிந்துவிட்டது. படத்தில் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்’ என பதிவிட்டுள்ளார். அநேகமாக அக்.25ம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News