×

சிவாவின் அடுத்த ஹீரோ இவரா?..

இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. அதன் பின் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்து யாரை வைத்து சிவா இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. விஸ்வாசம் படம் வெற்றி பெற்றுள்ளதால், அஜித்
 
சிவாவின் அடுத்த ஹீரோ இவரா?..

இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. அதன் பின் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்து யாரை வைத்து சிவா இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. விஸ்வாசம் படம் வெற்றி பெற்றுள்ளதால், அஜித் மீண்டும் அவருக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக செய்தி கசிந்துள்ளது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News