×

இது நம்ம லிஸ்ட்லே இல்லையா! கமலுக்கு அவர் ஸ்டைலிலேயே வாழ்த்து – ஹர்பஜன் சிங் போட்ட அதிரடி டிவிட்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிலும், கமல்ஹாசன் ஸ்டைலிலேயே கவிதை கூறி அவரை வாழ்த்துள்ளார். ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள கவிதையாவது: சினிமா என்னும் துறவை துரத்தி சிறகு செதுக்கிய
 
இது நம்ம லிஸ்ட்லே இல்லையா! கமலுக்கு அவர் ஸ்டைலிலேயே வாழ்த்து – ஹர்பஜன் சிங் போட்ட அதிரடி டிவிட்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எனவே அவருக்கு அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிலும், கமல்ஹாசன் ஸ்டைலிலேயே கவிதை கூறி அவரை வாழ்த்துள்ளார். ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள கவிதையாவது:

சினிமா என்னும் துறவை

துரத்தி சிறகு செதுக்கிய பறவை

உங்கள் அறுபத்து ஐந்து அகவை

எமக்கு விஸ்வரூப உவகை.

களிப்புற்றோம் காணீர்!

காலம் இருக்கட்டும்

உம் பெயர் சொல்லி!

கமல் சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி அண்ணா! என குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாகவே ஹர்பஜன் சிங் டிவிட்டரில் தமிழில் அதிக பதிவுகளை இட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News