×

அது ஒன்னும் தப்பில்ல! நித்யாமேனன்

நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒ காதல் கண்மணி படத்தில் கல்யாணம் பண்ணி கொள்ளாமல் ஒரே வீட்டில் காதலா்கள் தங்கி வாழும் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அவா் கதை, திரைக்கதையில் தலையிட்டு அதை மாற்றி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது குறித்து நித்யாமேனன், அப்படி கதை
 
அது ஒன்னும் தப்பில்ல! நித்யாமேனன்

அது ஒன்னும் தப்பில்ல! நித்யாமேனன்

நடிகை நித்யாமேனன் வெப்பம், 180, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். இவா் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒ காதல் கண்மணி படத்தில் கல்யாணம் பண்ணி கொள்ளாமல் ஒரே வீட்டில் காதலா்கள் தங்கி வாழும் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அவா் கதை, திரைக்கதையில் தலையிட்டு அதை மாற்றி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது குறித்து நித்யாமேனன், அப்படி கதை மற்றும் திரைக்கதையில் தலையிடுவது ஒன்றும் தப்பு இல்லை என்று கூறுகிறார்.

தெலுங்கு அவே படத்தில் ஒரினச்சோ்க்கையாளராக நடித்திருக்கிறார். இப்படியாக வித்தியாசமான கதைகளை தோ்ந்தெடுத்து நடித்து வரும் நித்யாமேனன், கதை சொல்ல வரும் இயக்குநா்களிடம் கதையில் மாற்றம் செய்ய சொல்லுவதாக அவா் மீது புகார் கூறுகிறார்கள். இது பற்றி அவா் கூறியதாவது, என்னிடம் இயக்குநா்கள் கதை சொல்ல வந்தால் நான் அதில் தலையிடுவது உண்மை தான். என்னிடம் நிறைய போ் கதை சொல்ல வந்தால் அந்த கதைகளில் நான்கு அல்லது 5 கதைகளை மட்டுமே தோ்வு செய்கிறேன். எந்த கதை வித்தயாசமாக இருக்கிறதோ அந்த கதையில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தான் திரைக்கதை விஷயத்தில் தலையிட்டு கொஞ்சம் மாற்றம் செய்ய சொல்கிறேன். அதுபோல வசனங்களையும் கொஞ்சம் மாற்றம் செய்ய வைக்கிறேன். இப்படி திரைக்கதை வசனங்களை மாற்றம் செய்வதை தப்பு என்று நான் நினைக்கவில்லை.

கதை வித்தியாசமாக இருந்தால் எப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரமானாலும் உடனே நடிப்பேன். அவே படத்தில் ஓரினச்சோ்க்கையாளராக நடித்ததில் கூட எனக்கு வருத்தமே இல்லை என்கிறார் நித்யாமேனன். வருங்காலத்தில் இயக்குநராகும் ஆசை இருக்கிறது. என்ன காரணத்தாலும் தயாரிப்பாளர் ஆக மாட்டேன். என்னவென்றால் எனக்கு வரவு செலவு கணக்கு எல்லாம் பார்க்க தெரியாது. தற்போது பிராணா என்ற தெலுங்குபடத்தில்  நித்யாமேனன் நடித்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News