×

ஜெட் வேகத்தில் தளபதி 64 படப்பிடிப்பு… ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு எப்போது தெரியுமா?

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாநகரம், கைதி ஆகிய படங்கள் மூலம் பேசப்படும் இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 64வது படமாகும். இப்படத்திற்கு விஜய் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்திருப்பதாலும், வார விடுமுறைகளிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாலும் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னையில் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்ட நிலையில், சில
 
ஜெட் வேகத்தில் தளபதி 64 படப்பிடிப்பு… ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு எப்போது தெரியுமா?

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மாநகரம், கைதி ஆகிய படங்கள் மூலம் பேசப்படும் இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 64வது படமாகும். இப்படத்திற்கு விஜய் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்திருப்பதாலும், வார விடுமுறைகளிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாலும் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சென்னையில் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளது. படத்தில் விஜயும், விஜயும் சேதுபதியும் பங்கு பெறும் காட்சிகள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. அந்த காட்சிகளை கர்நாடக மாநிலத்தில் எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

படப்பிடிப்பை வேகமாக நடத்தி வரும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு செலவை மிகவும் குறைத்துள்ளாராம். இது விஜய்க்கும், தளபதி 64 பட தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். அநேகமாக டிசம்பர் மாத முடிவில் தளபதி 64 படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும் எனவும், புத்தாண்டில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News