×

கார்த்தியுடன் முதல்முறையாக இணையும் அவரது அண்ணி ஜோதிகா!

karthi jyothika : ‘தேவ்’ படம் படுதோல்வி அடைந்ததால், அடுத்த படத்தை வெற்றிபடமாக கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் வேலை செய்து வருகிறார் கார்த்தி. தேவ் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கைதி என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது, இந்த படத்துக்கு பின்னர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ‘இயக்கிய
 
கார்த்தியுடன் முதல்முறையாக இணையும் அவரது அண்ணி ஜோதிகா!

karthi jyothika : ‘தேவ்’ படம் படுதோல்வி அடைந்ததால், அடுத்த படத்தை வெற்றிபடமாக கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் வேலை செய்து வருகிறார் கார்த்தி. தேவ் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு கைதி என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது,

இந்த படத்துக்கு பின்னர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் ‘இயக்கிய ’த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் தான் ஜீத்து ஜோசப். இவர் இயக்கும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து அவரது அண்ணி ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகியை படக்குழு தேடி வருகிறது.

ஜீத்து ஜோசப் படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News