×

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் தொடக்கப் பாடல் பற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளது. பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று தற்போது முடிந்துவிட்டது. இப்படத்தின் டப்பிங் பணி தற்போது முடிந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும்
 
சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் தொடக்கப் பாடல் பற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று தற்போது முடிந்துவிட்டது. இப்படத்தின் டப்பிங் பணி தற்போது முடிந்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஒப்பனிங் பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ‘சும்மா கிழி’ எனத்துவங்கும் இப்பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பேட்ட படத்தில் மரண மாஸ் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News