×

கமலுக்கு அந்த தகுதி இருக்கு… ரஜினிக்கு இல்லை… சீமான் விளாசல்

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது இல்லை என ரஜினி கூறியதற்கு நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘ரஜினி ஒரு நடிகர். தமிழகத்தின் உச்சபட்ச இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகை ஆகியோரை தன் படங்களில் வைத்துக்கொண்டு ஹிட் கொடுத்து வருகிறார். அவர் எப்படி ஆளுமை பற்றியெல்லாம் பேசலாம்? அவர் எப்போதாவது கதை, வசனம், திரைக்கதை எழுதி படம் இயக்கியுள்ளாரா?. கமல் கூட அதையெல்லாம் செய்திருக்கிறார். அவர் ஆளுமை பற்றி பேசலாம்.
 
கமலுக்கு அந்த தகுதி இருக்கு… ரஜினிக்கு இல்லை… சீமான் விளாசல்

தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது இல்லை என ரஜினி கூறியதற்கு நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘ரஜினி ஒரு நடிகர். தமிழகத்தின் உச்சபட்ச இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகை ஆகியோரை தன் படங்களில் வைத்துக்கொண்டு ஹிட் கொடுத்து வருகிறார். அவர் எப்படி ஆளுமை பற்றியெல்லாம் பேசலாம்?

அவர் எப்போதாவது கதை, வசனம், திரைக்கதை எழுதி படம் இயக்கியுள்ளாரா?. கமல் கூட அதையெல்லாம் செய்திருக்கிறார். அவர் ஆளுமை பற்றி பேசலாம். ரஜினி பேசக்கூடாது. அரை மணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக இல்லாத ரஜினி ஆளுமை பற்றியெல்லாம் பேசக்கூடாது.

அவருக்கு முதல்வர் ஆவதுதான் கனவு. சினிமாவில் வருவது போல் அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாவது ஹீரோ எல்லாம் கிடையாது. நேராக கதாநாகன் வேடம்தான் ஆசை அவருக்கு. வெறும் திரை பிரபலத்தை மட்டும் வைத்து இனியொருவர் தமிழ்நாட்டை ஆள முடியாது’ என சீமான் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News