×

ரஜினிக்கு மகளாக நடிக்கும் முன்னணி நடிகை…

Nivetha Thomas – முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்க ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மற்றொரு வேடத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும்,
 
ரஜினிக்கு மகளாக நடிக்கும் முன்னணி நடிகை…

Nivetha Thomas – முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்க ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மற்றொரு வேடத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

ரஜினிக்கு மகளாக நடிக்கும் முன்னணி நடிகை…

இப்படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ரஜினி படம் என்பதால் மிகவும் சந்தோஷத்துடன் நடிக்க அவர் ஒப்புக்கொள்வார் எனத் தெரிகிறது

அதேபோல், இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்த நிவேதா தாமஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News