×

பேட்ட படத்தின் நீளம் – என்ன சொன்னார் ரஜினி?

பேட்ட படத்தின் நீளத்தை குறைக்க வேண்டாம் என கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி கூறிவிட்டதாக செய்திக் கசிந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 10ம் தேதி வெளியான படம் பேட்ட. இப்படத்தில் துள்ளலான, ஸ்டைலான பழைய ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் காட்டியிருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனது. ஆனால், முதல் பாதியை விட இரண்டம் பாதி நீளமாக இருப்பதால் 25 நிமிடங்கள் நீக்கினால் இன்னும் நன்றாக இருக்கும் என விமர்சனங்கள் எழுந்தது. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை
 
பேட்ட படத்தின் நீளம் – என்ன சொன்னார் ரஜினி?

பேட்ட படத்தின் நீளத்தை குறைக்க வேண்டாம் என கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி கூறிவிட்டதாக செய்திக் கசிந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 10ம் தேதி வெளியான படம் பேட்ட. இப்படத்தில் துள்ளலான, ஸ்டைலான பழைய ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் காட்டியிருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனது. ஆனால், முதல் பாதியை விட இரண்டம் பாதி நீளமாக இருப்பதால் 25 நிமிடங்கள் நீக்கினால் இன்னும் நன்றாக இருக்கும் என விமர்சனங்கள் எழுந்தது.

பேட்ட படத்தின் நீளம் – என்ன சொன்னார் ரஜினி?

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினியை நேரில் சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் இதுபற்றி கூறியுள்ளார். நீங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டால் உடனடியாக 20 நிமிட காட்சிகளை நீக்கிவிடலாம் எனக்கூறியுள்ளார்.

ஆனால், ரஜினி வேண்டாம் எனக்கூறி விட்டாராம். மக்கள் ரசிக்கிறார்கள். தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள். எனவே, காட்சிகளை நீக்க வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள் எனக்கூறிவிட்டாராம். எனவேதான், அந்த எண்ணத்தை கார்த்திக் சுப்புராஜ் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News