×

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

கமல் கட்சியை ஆரம்பித்து முதல் கட்டமாக தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து கட்சி கொடி,சின்னம்,கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரஜினி தனது ரசிகா்களை சந்தித்து வருகிறார். தற்போது நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியதாவது, சத்தம் போடுகிறவா்கள் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக நமது வேலையை பார்ப்போம் என்று கூறினார். சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரை காணொளி
 
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

கமல் கட்சியை ஆரம்பித்து முதல் கட்டமாக தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து கட்சி கொடி,சின்னம்,கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரஜினி தனது ரசிகா்களை சந்தித்து வருகிறார். தற்போது நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியதாவது, சத்தம் போடுகிறவா்கள் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக நமது வேலையை பார்ப்போம் என்று கூறினார்.

சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரை காணொளி மூலம் கலந்துரையாடி வந்த ரஜினி இன்று திடீரென நேரில் நெல்லை மாவட்ட ரசிகா்களை நேரில் சந்தித்து பேசினார். நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாவது, அரசியலில் மிக முக்கியம் குடும்பம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன். மற்றவா்கள் சத்தம் போட்டால் போடட்டும் நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் என்று பேசினார்.

அதுபோல அனைத்து ரசிகா்களையும் சந்திக்க சில நாட்கள் வரை ஆகும். அரசியலில் மெதுவாக தான் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்க வேண்டும். அவசரம் இல்லாமல் பொறுமையாக இருப்போம். அரசியலில் கட்டமைப்பு தான் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும். அடித்தளத்தை வலிமையாக அமைத்து விட்டால் தான் நன்றாக இருக்கும். அதுபோல கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது.கமல் மிகவும் சிறப்பாக செயல்படுவார் எனவும் கூறினார். கமல்,ரஜினி இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்றாலும் இருவரின் நோக்கம் என்னவோ மக்களுக்கு நல்லது செய்வது மட்டும் அவா்களின் கொள்கை. 

அதுபோல எனது ரசிகா்களுக்கு அரசியல் கற்று தரவேண்டும். அவா்கள் மற்றவா்களுக்கு கற்று தருவார்கள். மேலும் இது நீண்ட பயணம். பார்த்து கவனமாக செல்லவேண்டும். இந்த இயக்கம் 32 ஆண்டுகளாக கட்டமைப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருக்கிறது. அடித்தளம் பலமாக அமையவேண்டும் என்று கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News