×

அமெரிக்க மருத்துவருடன் திருமணமா? தமன்னா விளக்கம்

பாகுபலியால் பெரும் புகழ் பெற்று வலம் வரும் தமன்னா, அமெரிக்க டாக்டரை திருமணம் செய்யப்போவதாக டுவிட்டரில் தகவல் பரவியது. இதற்கு தமன்னா மிகக் கோபமாக விளக்கம் அளித்துள்ளார் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்துள்ளார். ஏரளாமான டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த பாகுபலி படம் இந்திய அளவில் பெரும் புகழை பெற்று தந்தது. தற்போது அவரது மார்க்கெட் நல்ல நிலையிலேயே
 
அமெரிக்க மருத்துவருடன் திருமணமா? தமன்னா விளக்கம்

பாகுபலியால் பெரும் புகழ் பெற்று வலம் வரும் தமன்னா, அமெரிக்க டாக்டரை திருமணம் செய்யப்போவதாக டுவிட்டரில் தகவல் பரவியது. இதற்கு தமன்னா மிகக் கோபமாக விளக்கம் அளித்துள்ளார்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்துள்ளார். ஏரளாமான டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த பாகுபலி படம் இந்திய அளவில் பெரும் புகழை பெற்று தந்தது. தற்போது அவரது மார்க்கெட் நல்ல நிலையிலேயே இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் மீடியா ஒன்று தனது டுவிட்டரில், நடிகை தமன்னா அமெரிக்க டாக்டரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வெளியிட்டது. இதனை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒரு நாள் நடிகர். மற்றொரு நாள் கிரிக்கெட்டர். பின்னர் டாக்டர் என தொடர்ந்து எனது திருமணம் குறித்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இதுபோன்ற அடிப்படை ஆதரமற்ற தகவல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியுடன் உள்ளேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை.

தற்போதைக்கு நான் சினிமாவைத் தான் காதலித்து வருகிறேன். எனவே நான் ஷுட்டிங் என பிஸியாக இருக்கையில் இப்படியான இவ்வாறான வதந்திகள் முளைப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

அதே சமயம் எனக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது. திருமணம் என்ற பந்தத்துக்கு நுழைய முடிவு எடுத்தபின் நானே முறையாக தெரிவிப்பேன்.

எனவே திருமணம் குறித்து தற்போது நான் எதுவும் சிந்திக்கவில்லை. ஆகையால் கற்பனை செய்வதை தவிர்த்து வதந்தி பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News