×

லாரன்ஸ் பெயரில் பண மோசடி – போலிஸில் புகார் !

பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. பிரபல நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் நடிப்பைத் தவிர பொதுச்சேவைகளும் செய்து வருகிறார். ஆதரவற்றக் குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் முதியோர் இல்லம் போன்றவற்றை அவரது அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வீடு கட்டித் தருவதாக சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகவா லாரன்ஸ் மக்கள்
 
லாரன்ஸ் பெயரில் பண மோசடி – போலிஸில் புகார் !

பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் நடிப்பைத் தவிர பொதுச்சேவைகளும் செய்து வருகிறார். ஆதரவற்றக் குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் முதியோர் இல்லம் போன்றவற்றை அவரது அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வீடு கட்டித் தருவதாக சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மையத்தின் பொதுச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். அவரது புகாரில் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News