×

கல்லூரி மாணவி கொலையில் சிக்கிய கொலையாளி: விசாரணையில் பகீர் தகவல்கள்

Pollachi issue: பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்ப்பட்டுக் கிடந்த பிரகதி அணிந்திருந்த நகைகள் திருடு போகவில்லை. எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை
 
கல்லூரி மாணவி கொலையில் சிக்கிய கொலையாளி: விசாரணையில் பகீர் தகவல்கள்

Pollachi issue: பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்ப்பட்டுக் கிடந்த பிரகதி அணிந்திருந்த நகைகள் திருடு போகவில்லை. எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பது உறுதியானது. கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய அவரை 2 பேர் காரில் கடத்தி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானதை கண்ட போலீசார் இதுபற்றி தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் பிரகதிக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் சதீஷ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். ஆனாலும் பிரகதியை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்த காதலை பிரகதி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. வருகிற ஜூன் மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த சதீஷ் பிரகதியை கடத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை சதீஷ் மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வருக்கு உதவிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News