×

அடுத்தது அரசியல் களம் – அஜித் எடுத்த அதிரடி முடிவு !

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் படத்திற்குப் பிறகு அடுத்ததாக அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் அரசியல் படமாக உருவாகி வருகிறது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார். அதையடுத்து அஜித்திடம் இரண்டு கதைகளைக் கூறிய ஹெச் வினோத் சமூகப் போராளி ஒருவரின் கதைக்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த படத்தின்
 
அடுத்தது அரசியல் களம் – அஜித் எடுத்த அதிரடி முடிவு !

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் படத்திற்குப் பிறகு அடுத்ததாக அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் அரசியல் படமாக உருவாகி வருகிறது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார்.

அதையடுத்து அஜித்திடம் இரண்டு கதைகளைக் கூறிய ஹெச் வினோத் சமூகப் போராளி ஒருவரின் கதைக்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக அரசியல் விஷயங்களில் அதிகமாக ஆர்வம் இல்லாத அஜித் இந்த முறைத் தானே விருப்பப்பட்டு அரசியல் களம் கொண்ட படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News