×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. திமுக தங்கள் தொகுதியான விக்கிரவாண்டியில் புகழேந்தி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. திமுக தங்கள் தொகுதியான விக்கிரவாண்டியில் புகழேந்தி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்குநேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News