×

கேரளாவை கலக்கும் நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுன்னி பட பாடல்

மலையாள திரையுலக பாடல் என்றாலே எதிர்பாராமல் மிகப்பெரும் ஹிட் ஆகும் இன்று என்றில்லை பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த ஃபோர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற லஜ்ஜாவதியே பாடல் கூட அப்படி ஹிட் ஆன பாடல்தான் ஜாஸி கிப்ட் என்ற மியூசிக் டைரக்டர் இந்த பாடல் மூலம் புகழ்பெற்றார். அதே போல் சமீபத்தில் வந்த ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர் கண்ணடித்தது என கேரள பாடல்கள் எல்லாம் இங்கு மிகப்பெரும் ஹிட் ஆவது வாடிக்கை. அந்த வகையில்
 
கேரளாவை கலக்கும் நிவின் பாலியின் காயங்குளம் கொச்சுன்னி பட பாடல்

மலையாள திரையுலக பாடல் என்றாலே எதிர்பாராமல் மிகப்பெரும் ஹிட் ஆகும் இன்று என்றில்லை பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த ஃபோர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற லஜ்ஜாவதியே பாடல் கூட அப்படி ஹிட் ஆன பாடல்தான் ஜாஸி கிப்ட் என்ற மியூசிக் டைரக்டர் இந்த பாடல் மூலம் புகழ்பெற்றார்.

அதே போல் சமீபத்தில் வந்த ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர் கண்ணடித்தது என கேரள பாடல்கள் எல்லாம் இங்கு மிகப்பெரும் ஹிட் ஆவது வாடிக்கை.

அந்த வகையில் நிவின்பாலி ஏற்கனவே பிரேமம் படம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகைகளையும் பெற்றுள்ளார். அவரின் படங்கள் தமிழிலும் வந்துள்ளன. தமிழில் குறிப்பிட்ட மார்க்கெட் அவருக்கு உண்டு.

பீரிய்ட பிலிம் ஆக உருவாகி வரும் காயம்குளம் கொச்சுன்னியில் நிவின் பாலி கொள்ளையராக நடிக்கிறார். இவருடன் மோகன்லாலும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

தமிழிலும் இப்படம் வெளிவருவதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது, விஜய் ஜேசுதாஸ், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்த மெலடி பாடல் கேரளாவை கலக்கி வருகிறது.

https://www.youtube.com/watch?v=MoJ6ZJyLXGA

From around the web

Trending Videos

Tamilnadu News