×

போனியாகாத கடாரம் கொண்டான் – ஸ்கெட்ச் & சாமி 2 எஃபக்ட் !

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் தயாரிப்பாளர்களே நேரடியாக ரிலிஸ் செய்ய உள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் கமல் நடிக்காத ஒரு படத்தை தயாரித்துள்ளது. கமல் அரசியலுக்கு சென்று விட்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொலைக்காட்சி விளம்பரங்கள், பிக்பாஸ் என வருவாய் ஈட்டிக்கொண்டிருந்த கமல் இப்போது மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கியுள்ளார். நீண்ட நாட்களாக விக்ரம் தனக்கான ஒரு வெற்றியைத் தேடிக் கொண்டிருக்க அதைக் கடாரம்
 
போனியாகாத கடாரம் கொண்டான் – ஸ்கெட்ச் & சாமி 2 எஃபக்ட் !

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் தயாரிப்பாளர்களே நேரடியாக ரிலிஸ் செய்ய உள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் கமல் நடிக்காத ஒரு படத்தை தயாரித்துள்ளது. கமல் அரசியலுக்கு சென்று விட்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொலைக்காட்சி விளம்பரங்கள், பிக்பாஸ் என வருவாய் ஈட்டிக்கொண்டிருந்த கமல் இப்போது மீண்டும் படம் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக விக்ரம் தனக்கான ஒரு வெற்றியைத் தேடிக் கொண்டிருக்க அதைக் கடாரம் கொண்டான் கொடுக்கும் என நம்பிக்கையில் உள்ளாராம். ஆனால் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படமோ இதுவரை தமிழ்நாடு திரையரங்கு உரிமை விற்கப்படாமல் உள்ளதாம். அதற்குக் காரணம் விக்ரம்மின் முந்தையப் படங்களான ஸ்கெட்ச் மற்று  சாமி 2 ஆகியவற்றின் தோல்வியே. இதனால் கடாரம்கொண்டான் படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதனால் படத்தை தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமே வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News