×

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

தீபாவளி நெருங்கும் நேரத்தில் அது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து திருச்சி, மதுரை, சேலம், கோயம்பத்தூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பலரும் தீபாவளியை கொண்டாட கடைசி நேரத்தில் அடித்து பிடித்து பேருந்து, ரயில் என ஏறி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கொடுப்பார்கள். அதிலும் இந்த முறை தீபாவளி
 
பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

தீபாவளி நெருங்கும் நேரத்தில் அது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து திருச்சி, மதுரை, சேலம், கோயம்பத்தூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பலரும் தீபாவளியை கொண்டாட கடைசி நேரத்தில் அடித்து பிடித்து பேருந்து, ரயில் என ஏறி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கொடுப்பார்கள். அதிலும் இந்த முறை தீபாவளி 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அடுத்த நாள் திங்கட் கிழமை பலருக்கும் விடுமுறை கிடைக்காது. இது ஒருபுறம் எனில், ஒரு நாள் விடுமுறையில் செல்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் தாண்டவே சில மணி நேரங்கள் ஆகிவிடும். இதைக் கிண்டலடுக்கும் வகையில் ‘ பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும்’ என்கிற மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News