×

ஓவரா பேசக்கூடாது.. ஹீரோவாக கெடச்சது ஒரே ஹிட்டுதான் – வடிவேலுவை விளாசிய நவீன்

Naveen comment Vadivelu – இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் பற்றி வடிவேல் தெரிவித்துள்ள கருத்துக்கு மூடர் கூடம் நவீன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி கொடுத்த வடிவேல் இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறியதோடு, அவரை அவன்.. இவன் என ஒருமையில் பேசினார். மேலும், இயக்குனர் ஷங்கருக்கும் ஒன்னும் தெரியாது. கிராபிக்ஸை வைத்துக்கொண்டு பொழைப்பை ஓட்டி வருகிறார் என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவியாளராகவும், மூடர் கூடம் படத்தை இயக்கி
 
ஓவரா பேசக்கூடாது.. ஹீரோவாக கெடச்சது ஒரே ஹிட்டுதான் – வடிவேலுவை விளாசிய நவீன்

Naveen comment Vadivelu – இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் பற்றி வடிவேல் தெரிவித்துள்ள கருத்துக்கு மூடர் கூடம் நவீன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த வடிவேல் இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறியதோடு, அவரை அவன்.. இவன் என ஒருமையில் பேசினார். மேலும், இயக்குனர் ஷங்கருக்கும் ஒன்னும் தெரியாது. கிராபிக்ஸை வைத்துக்கொண்டு பொழைப்பை ஓட்டி வருகிறார் என கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவியாளராகவும், மூடர் கூடம் படத்தை இயக்கி நடித்தவருமான நவீன் வடிவேலுவை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக பல டிவிட்டுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை இப்படி பேசியுள்ளார்.

ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.

உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் சிம்பு தேவன், ஷங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்” என அவர் பொறிந்து தள்ளியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News