×

பிக்பாஸ் புகழுக்கு பின் வெளியாகும் ஓவியாவின் முதல் படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டாா் ஒவியா. சினிமாவில் நடித்த போது கிடைக்காத ரசிகா்களின் இந்த அன்பு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வரலாறு காணாத அளவு உச்சத்தில் இருக்கிறாா் ஒவியா. அவா் இல்லாத நிகழ்ச்சி உப்பு இல்லாத சாப்பாடு போன்று தான் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக ஒவியா தொிவித்தாா். இதை அவா் மறுக்கவே மனத்தளவில் பொிதும் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவராகவே இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாா்.
 
பிக்பாஸ் புகழுக்கு பின் வெளியாகும் ஓவியாவின் முதல் படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டாா் ஒவியா. சினிமாவில் நடித்த போது கிடைக்காத ரசிகா்களின் இந்த அன்பு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வரலாறு காணாத அளவு உச்சத்தில் இருக்கிறாா் ஒவியா. அவா் இல்லாத நிகழ்ச்சி உப்பு இல்லாத சாப்பாடு போன்று தான் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக ஒவியா தொிவித்தாா். இதை அவா் மறுக்கவே மனத்தளவில் பொிதும் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவராகவே இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாா். வெளியே வந்த ஒவியா சென்னையில் உள்ள சிட்டி சென்டருக்கு சென்றாா். அங்கு வந்த ரசிகா்கள் அவருடன் உரையாடியதோடு நிற்காமல் நிகழ்ச்சி குறித்தும் பேசினாா். பின்பு அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டனா்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒவியா கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் சோ்த்து 27 படங்களில் நடித்துள்ளாா். தற்போது விஷ்ணு விஷால் நடித்து அறிமுக இயக்குனரான செல்லா இயக்கத்தில் சிலுக்குவாா்பட்டி சிங்கம் படத்தில் ஒவியா நடித்துள்ளாா். ஒவியாவோடு மற்றும் இன்னொரு நாயகியும் நடித்துள்ளாா். அந்த நாயகி வேறு யாரும் இல்லங்க!  அட அது நம்ம உன் மேல எம்புட்டு ஆசை பாடலின் நாயகி ரெஜினா தான். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் பேரன்பை பெற்று விட்ட ஒவியாவுக்கு படவாய்ப்புகள் வந்து குவியும் என்பது உண்மை. இதோடு போகி என்ற படத்திலும் நடித்து வருகிறாா். இவா் நடிப்பில் வெளி வர உள்ள சிலுக்குவாா்பட்டி சிங்கம் படத்தை எதிா்பாா்த்து காத்திருக்கிறாா்கள் ரசிக சிகாமணிகள். ஒவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வரப்பிரதமாக அமைந்திருக்கிறது. அவரது சினிமா கொியரை திருப்பி போட வைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News