×

கைத்தறி அமைச்சரின் காரை நொறுக்கிய மக்கள்! நாகையில் பரபரப்பு.

நிவாரண பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அடித்து நொறுக்கிய மக்கள். கஜா புயலால் நாகை உள்பட 7 மாவட்டங்களில் பெரும் சேதம் அடைந்துள்ளது.குறிப்பாக நாகை மாவட்டத்தில் பல கிராமங்களில் வாழும் லட்சகனக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து,கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை தவிர வேறு எந்த பகுதியிலும் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.இதை அடுத்து அவர் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
கைத்தறி அமைச்சரின் காரை நொறுக்கிய மக்கள்! நாகையில் பரபரப்பு.

நிவாரண பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அடித்து நொறுக்கிய மக்கள்.

 

கஜா புயலால் நாகை உள்பட 7 மாவட்டங்களில் பெரும் சேதம் அடைந்துள்ளது.குறிப்பாக நாகை மாவட்டத்தில் பல கிராமங்களில் வாழும் லட்சகனக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதையடுத்து,கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை தவிர வேறு எந்த பகுதியிலும் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.இதை அடுத்து அவர் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கைத்தறி அமைச்சரின் காரை நொறுக்கிய மக்கள்! நாகையில் பரபரப்பு.

இந்நிலையில் வேட்டைக்காரனிருப்பு அருகே கன்னித்தோப்பு கிராமத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிவாரண பணிகளை பார்வையிட சென்றபோது திடீரென அவரது காரை மக்கள் நிறுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியை எப்படி கூறலாம் என கேட்டனர். அப்போது அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை பொது மக்கள் அடித்து நொறுக்கினர்.

பின் போலீஸார் அமைச்சரை பாதுகாப்பாக அழைத்து சென்று பொது மக்கள் மீது சிறு தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.இச்சம்பம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News