×

பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு கலவரம் – அதுக்கு வனிதாவுக்கு இதுதான் சம்பளம்

Biggboss vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு சண்டை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தவே வனிதா விஜயகுமாரை மீண்டும் பிக்பாஸ் உள்ளே அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல் அடித்தது. ஏனெனில், அவர் ஏதாவது ஒரு களோபரத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தார். அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வெகுவாக குறைந்தது. எனவே, நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனால், அவரால் எந்த பரபரப்பையும் பிக்பாஸ் வீட்டில்
 
பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு கலவரம் – அதுக்கு வனிதாவுக்கு இதுதான் சம்பளம்

Biggboss vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு சண்டை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தவே வனிதா விஜயகுமாரை மீண்டும் பிக்பாஸ் உள்ளே அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல் அடித்தது. ஏனெனில், அவர் ஏதாவது ஒரு களோபரத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருந்தார். அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி வெகுவாக குறைந்தது. எனவே, நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனால், அவரால் எந்த பரபரப்பையும் பிக்பாஸ் வீட்டில் உண்டு பண்ண முடியவில்லை.

பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு கலவரம் – அதுக்கு வனிதாவுக்கு இதுதான் சம்பளம்

எனவே, தற்போது வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். வீட்டிற்கு சென்றவுடனேயே தனது வேலையை துவங்கிய வனிதா எல்லோரையும் கடுமையாக விமர்சித்தார். முகினுக்கும், அபிராமிக்கும் இடையே மோதலை ஏற்படுத்தினார். மேலும், மதுமிதாவுக்கும் அங்கிருக்கும் ஆண்களுக்கும் இடையேயும் மோதலை உருவாக்கினார்.

இதற்காக ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News