×

காதலியுடன் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் – புதிய பட அறிவிப்பு

Bigg Boss Darshan movie – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது நடவடிக்கை மூலம் யாரையும் புண்படுத்தாமல் விளையாடி வருகிறார். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார். வனிதா விஜயகுமார், சரவணன் என அனைவரும் கோபப்பட்ட போது நீங்கள் செய்தது தவறு என வாதாடினார். இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக
 
காதலியுடன் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் – புதிய பட அறிவிப்பு

Bigg Boss Darshan movie – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது நடவடிக்கை மூலம் யாரையும் புண்படுத்தாமல் விளையாடி வருகிறார். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார். வனிதா விஜயகுமார், சரவணன் என அனைவரும் கோபப்பட்ட போது நீங்கள் செய்தது தவறு என வாதாடினார். இதனால் கமலின் பாராட்டையும் அவர் பெற்றார். எனவே, அவரே இறுதி போட்டியாளராக வெற்றி பெறுவார் என பிக்பாஸ் வீட்டிலிருக்கும் பலரே கூற தொடங்கி விட்டனர்.

காதலியுடன் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் – புதிய பட அறிவிப்பு

இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. ரீலீங் பக்ஸ் புரடெக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்தான் தர்ஷன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘மேகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷனின் நிஜமான காதலியான சனம் ஷெட்டியே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.

ஏற்கனவே, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தர்ஷன் இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News