×

தூக்கப்பட்ட பிகில்… நின்று கொடிநாட்டிய கைதி – கல்லா கட்டும் கார்த்தி !

தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்பட்டுள்ளது. ஆனால் கைதி திரைப்படம் இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. விஜய்யின் படம் என்பதால் பிகிலைத் திரையிடவே அனைத்துத் திரையரங்கங்களும் ஆர்வம் காட்டின. அதனால் பெரிய திரைகள் அனைத்தும் பிகிலுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் கைதிக்கு திரையரங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் கைதி படம் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. முதலிரண்டு நாட்களில் பிகில் படம்
 
தூக்கப்பட்ட பிகில்… நின்று கொடிநாட்டிய கைதி – கல்லா கட்டும் கார்த்தி !

தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்பட்டுள்ளது. ஆனால் கைதி திரைப்படம் இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. விஜய்யின் படம் என்பதால் பிகிலைத் திரையிடவே அனைத்துத் திரையரங்கங்களும் ஆர்வம் காட்டின. அதனால் பெரிய திரைகள் அனைத்தும் பிகிலுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் கைதிக்கு திரையரங்கள் ஒதுக்கப்பட்டன.

இதனால் கைதி படம் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. முதலிரண்டு நாட்களில் பிகில் படம் கொண்டாடப்பட்டாலும் அதன் பிறகு அதன் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அதற்கு பிகில் படத்தில் வலுவான கதை இல்லாததே காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் வலுவான கதையம்சம் கொண்ட கைதி படத்துக்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்த படத்தில் கதாநாயகி, பாடல்கள் போன்ற கமர்சியல் விஷயங்கள் இல்லை.

இந்நிலையில் தற்போது கைத் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்க பிகில் படம் நிறைய திரையரங்கங்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News