×

பொன்னியின் செல்வன்.. நயன்தாரா உள்ளே.. சிம்பு வெளியே..

Actres Nayanthara – பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால் நான் விலகுவிடுவேன் என நயன்தாரா கூறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. மணிரத்னம் பல வருடங்களாக எடுக்க முயற்சி செய்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போதுதான் அவருக்கு சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தெலுங்கு நடிகர் மோகன்பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், முக்கிய வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.
 
பொன்னியின் செல்வன்.. நயன்தாரா உள்ளே.. சிம்பு வெளியே..

Actres Nayanthara – பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால் நான் விலகுவிடுவேன் என நயன்தாரா கூறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

மணிரத்னம் பல வருடங்களாக எடுக்க முயற்சி செய்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போதுதான் அவருக்கு சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், தெலுங்கு நடிகர் மோகன்பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், முக்கிய வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதில் அனுஷ்கா நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

பொன்னியின் செல்வன்.. நயன்தாரா உள்ளே.. சிம்பு வெளியே..

தற்போது இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஏன் மறுத்தார் என்கிற செய்தி கசிந்துள்ளது. இப்படத்தின் வேலையை துவங்கிய உடனேயே இப்படத்தில் நீ நடிக்கிறாய் என சிம்புவிடம் கூறிய மணிரத்னம் அட்வான்ஸும் கொடுத்து விட்டாராம். ஆனால், சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறிவிட மணிரத்னத்தின் நிலைமை தர்ம சங்கடமாகிப் போனதாம். இதை அவர் சிம்புவிடம் தயங்கியபடி கூற, உங்கள் மீது எப்போதும் மரியாதை வைத்திருப்பவன் நான். நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நான் நடிக்க வருகிறேன். இந்த படத்திலிருந்து நான் விலகி விடுகிறேன் என பெருந்தன்மையுடன் சிம்பு விட்டுக்கொடுத்தாராம்.

எனவே, சிம்பு வெளியேறிவிட்டதால் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயாராவது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News