×

குண்டர் சட்டத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரியும் பணக்கார இளைஞர்களை ஆன்லைன் மூலம் தனது வலையில் விழவைத்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்த நடிகை ஸ்ருதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் பாலமுருகன் என்ற கோவை இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை ஸ்ருதியை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் பாலமுருகன் மட்டுமின்றி பல இளைஞர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இளைஞர்களிடம் வெவ்வேறு சிம்கார்டில் இருந்து பேசிய ஸ்ருதி,
 
குண்டர் சட்டத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை

குண்டர் சட்டத்தில் கைதான பிரபல தமிழ் நடிகைஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரியும் பணக்கார இளைஞர்களை ஆன்லைன் மூலம் தனது வலையில் விழவைத்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்த நடிகை ஸ்ருதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் பாலமுருகன் என்ற கோவை இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை ஸ்ருதியை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் பாலமுருகன் மட்டுமின்றி பல இளைஞர்களை ஏமாற்றியது தெரிய வந்தது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு இளைஞர்களிடம் வெவ்வேறு சிம்கார்டில் இருந்து பேசிய ஸ்ருதி, ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மோசடி செய்த பணத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்வது, ஸ்டார் ஓட்டல்களில் தங்குவது, தங்க, வைர நகைகளை வாங்கி குவிப்பது என ஆடம்பர வாழ்க்கை நடத்திய ஸ்ருதி தற்போது குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News