×

பிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறு பரப்பிய அமெரிக்க இணையதளம்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபலமான இணையதளம், பிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டது. அதில், பிரியங்கா சோப்ராவை ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரியங்கா
 
பிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறு பரப்பிய அமெரிக்க இணையதளம்!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபலமான இணையதளம், பிரியங்கா சோப்ரா திருமணம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டது.

அதில், பிரியங்கா சோப்ராவை ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான காதல் உண்மையானது இல்லை என்றும், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த கட்டுரையை அமெரிக்க இணையதளம் உடனயாக நீக்கிவிட்டது. இதற்காக அந்த இணைதளம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News