×

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

காதில் ஏற்பட்ட பிரச்ச்னைக்கு தவறுதலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்தள்ள பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ (9). 5ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி ஒன்று இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கக அழைத்து சென்றனர். அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர். இந்த
 
காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

காதில் ஏற்பட்ட பிரச்ச்னைக்கு தவறுதலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்தள்ள பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ (9). 5ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி ஒன்று இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கக அழைத்து சென்றனர். அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் ராஜஸ்ரீக்கு காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். இதனைகண்ட சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வேறொரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி இந்த சிறுமிக்கு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவும் மருத்துவமனை ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News