பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிய பட்டவா் ஹரிஷ் கல்யாண். பின் வில் அம்பு, சந்தமாமா, பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ். இதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை.
இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி பல பேருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவா். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார்.
ஹரிஷ் மற்றும் ரைசா இவா்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைப்பத்தோடு நிற்காமல், ஒய்.எஸ்.ஆா் பிலிம்ஸ் சார்பில், பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் உடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தை இளன் என்ற அறிமுக இயக்குநா் இயக்கி வருகிறார். காதல் காமெடி கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
வருகிற பிப்ரவரி 14ம் காதலா் தினத்தை முன்னிட்டு இந்த படக்குழு காதல் தின ஸ்பெஷலாக ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளது. அந்த இன்ப செய்தி என்னவென்றால், படத்தின் போஸ்டா் நாளை வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
தற்போது ஹரிஷ் தனது ட்விட்டா் வலைத்தள பக்கத்தில், இந்த படத்தை பற்றி ட்வீட் செய்துள்ளார். நாளை பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டா் வெளியாக உள்ளதால் மிக்க மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார். அதோடு அந்த படத்தின் மோஷன் போஸ்டருடன் பல சுவராஸ்சியமான தகவல்களும் வர உள்ளதாக கூறியுள்ளார். அதனால் உங்கள் அன்பான ஆதரவும் தேவை என்று ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
Very happy to announce that #PyaarPremaKaadhal ‘s motion poster will be out tomorrow.. more updates coming along with the motion poster @YSRfilms @thisisysr @elann_t @irfanmalik83 @Rajarajan7215 #KProductions Need all ur love&support
❤️ #PPK
— Harish kalyan (@iamharishkalyan) February 8, 2018