×

ராஜமவுலியின் அடுத்த படம் – பல தகவல்கள் உங்களுக்காக

Rajamouli RRR Movie : பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பெரிய இயக்குனராக ராஜமவுலி உருவெடுத்துள்ளார். எனவே, அவரின் அடுத்த படம் தொடர்பாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரின் அடுத்த படத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். தற்போது இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு
 
ராஜமவுலியின் அடுத்த படம் – பல தகவல்கள் உங்களுக்காக

Rajamouli RRR Movie : பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பெரிய இயக்குனராக ராஜமவுலி உருவெடுத்துள்ளார். எனவே, அவரின் அடுத்த படம் தொடர்பாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரின் அடுத்த படத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். தற்போது இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று ஆந்திராவில் நடந்தது. இதில், ராஜமவுலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ராஜமவுலியின் அடுத்த படம் – பல தகவல்கள் உங்களுக்காக

இப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர். குறிப்பாக ஹாலிவுட் நடிகை டெய்சி எட்ஜர் ஜோன்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் அடுத்த வருடம் ஜூலை 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

ராஜமவுலியின் அடுத்த படம் – பல தகவல்கள் உங்களுக்காக

From around the web

Trending Videos

Tamilnadu News