×

தேர்தல் பணியில் ராஜேந்திர பாலாஜி – அச்சத்தில் அதிமுக நிர்வாகிகள் !

நாங்குநேரி – விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. மூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி தேர்தல் பணிக்கு விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேர்தல் பணியில் ராஜேந்திர பாலாஜி – அச்சத்தில் அதிமுக நிர்வாகிகள் !

நாங்குநேரி – விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. மூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி தேர்தல் பணிக்கு விருதுநகர் மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகளே கலக்கமடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த சில நாட்களாக ராஜேந்திர பாலாஜி பேசும் பேச்சுகள் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் ஆகியவர்களைப் பற்றி தவறாகப் பேசி மக்கள் மத்தியில் எதிர்மறைப் பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் எதாவது பேசி சர்ச்சைகளைக் கிளப்பினால் மேலும் நிலைமை மோசமாகி தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என அதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News