×

ரஜினியின் நண்பர் நடிகர் அம்பரீஷ் திடீர் மரணம்…..

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் நேற்று இரவு காலமானார். கன்னடத்தில் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் அம்பரீஷ். தமிழிலும் பிரியா, இது நிஜமா? ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர்களில் ஒருவரான இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். நடிகை சுமலாதாவை இவர் திருமணம் செய்து கொண்டார். 66 வயதான அம்பரீஷ் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் வசித்த வந்த அவருக்கு, நேற்று இரவு
 
ரஜினியின் நண்பர் நடிகர் அம்பரீஷ் திடீர் மரணம்…..

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ் நேற்று இரவு காலமானார்.

கன்னடத்தில் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் அம்பரீஷ். தமிழிலும் பிரியா, இது நிஜமா? ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர்களில் ஒருவரான இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். நடிகை சுமலாதாவை இவர் திருமணம் செய்து கொண்டார்.

66 வயதான அம்பரீஷ் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் வசித்த வந்த அவருக்கு, நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் அவர் மரணமடைந்தர்.

இவரின் மரணம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மாநில அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News